பெரிய படங்களுடன் போட்டி போட்ட விஷால் | தமிழ் சினிமா | king news24x7

Update: 2025-01-07 10:31 GMT

மதகஜராஜா

விஷாலின் மதகஜராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களுடன் விஷாலின் பல படங்கள் வெளியாகி இருக்கின்றன. அப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் 


புரட்சித்தளபதி விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகஜராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் 2013 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் நிதி நெருக்கடி போன்ற பல பிரச்சனைகளால் இப்படம் வெளியாகவில்லை. அதன் பிறகு பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் இப்படத்தை வெளியிடமுடியவில்லை.


எனவே இனி மதகஜராஜா திரைப்படம் கண்டிப்பாக வெளியாகாது என்றே அனைவரும் நினைத்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.


என்னதான் மதகஜராஜா பழைய படமாக இருந்தாலும் தற்போதும் இப்படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்துடன் இப்படம் தில்லாக மோதவுள்ளது.


இந்நிலையில் இதற்கு முன்பே விஷாலின் பல படங்கள் பெரிய ஹீரோ படங்களுடன் மோதி வெற்றிபெற்றுள்ளன. அது என்னென்ன படங்கள் என தற்போது பார்க்கலாம்


விஷால் மற்றும் ஹரி கூட்டணியில் தாமிரபரணி என்ற திரைப்படம் 2007 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தான் விஜய்யின் போக்கிரி திரைப்படமும் அஜித்தின் ஆழ்வார் திரைப்படமும் வெளியானது. என்னதான் அஜித் மற்றும் விஜய் படங்களுக்கு நடுவே வெளியானாலும் தாமிரபரணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது



அடுத்ததாக சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த பாண்டியநாடு திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக 2013 ஆம் ஆண்டு வெளியானது. அதே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் ஆரம்பம் திரைப்படமும் வெளியானது. என்னதான் அஜித்தின் ஆரம்பம் திரைப்படம் மிகப்பெரிய ஹைப்பிற்கு மத்தியில் வெளியானாலும் விஷாலின் பாண்டியநாடு திரைப்படம் தில்லாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாண்டியநாடு திரைப்படத்திற்கு முன்பு வெளியான விஷாலின் ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்தன. இருப்பினும் அஜித்தின் ஆரம்பம் படத்துடன் தன் படத்தை வெளியிட்டு ஹிட்டடித்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பினார் விஷால்.


பாண்டியநாடு படத்தை தொடர்ந்து விஷாலின் பூஜை திரைப்படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டே வெளியானது. ஹரி மற்றும் விஷாலின் கூட்டணியில் உருவான பூஜை திரைப்படம் 2014 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அதே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் கத்தி திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற கத்தி திரைப்படத்துடன் வெளியான பூஜை திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது


விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த திரைப்படம் தான் எனிமி. இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு தீபாவளி ரிலீசாக எனிமி திரைப்படம் வெளியானது. அந்த சமயத்தில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படமும் தீபாவளி ரிலீசாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.



 


Tags:    

Similar News