கதாநாயகியாக அறிமுகமாகும் VJ ஏஞ்சலின் , நடிகர் சசிகுமார் வெளியிட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் | சினிமா | கிங் நியூஸ்

Update: 2025-01-29 09:26 GMT
கதாநாயகியாக அறிமுகமாகும் VJ ஏஞ்சலின் , நடிகர் சசிகுமார் வெளியிட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் | சினிமா | கிங் நியூஸ்

ஏஞ்சலின்

  • whatsapp icon

VJ ஏஞ்சலின் கதாநாயகியாக அறிமுகமாகவூள்ள செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இவர் சன் டிவியில் நியூஸ் ஆங்கராக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். தற்போது பிரபலமான தொகுபாளினியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஏஞ்சலின், ஹீரோயின் ஆக அறிமுகமாக உள்ளாராம். அதாவது கடந்த சில நாட்களாகவே சென்னையின் பல்வேறு பகுதிகளில் ‘மதுரை பையனுக்கு தமிழ் பொண்ணு வேணும்’ என்ற போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.


அந்த போஸ்டர் எதற்காக ஓட்டப்பட்டு இருக்கிறது என்கிற குழப்பத்திலேயே மக்கள் அதனை கடந்து சென்று கொண்டிருந்தனர். தற்போது அதற்கான பதில் கிடைத்திருக்கிறது. ஆம், அது ஒரு வெப் தொடருக்கான விளம்பரமாம். அந்த வெப் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக வெளியாக உள்ளதாம். இந்தத் தொடரின் மூலமாக தான் ஏஞ்சலின் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.


'மதுரை பையனுக்கு சென்னை பொண்ணு’ என்கிற வெப் தொடரில் தான், தொகுப்பாளினி ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் பழனிவேல் இயக்கியிருக்கும் இந்த வெப் தொடரை தயாரிப்பாளர் சஞ்சய் தயாரித்திருக்கிறார்.


இந்தத் தொடர் வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. போஸ்டரில் ஏஞ்சலின் அழகாக புடவை அணிந்துக் கொண்டு இருக்கிறார். கண்ணா ரவி பழைய ஸ்கூட்டர் ஒன்றை தள்ளிக்கொண்டு வருகிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமும், தெப்பக்குளமும் பின்னணியில் இருக்கிறது. எனவே இந்த தொடர் சென்னை பொண்ணுக்கும், மதுரை பையனுக்கும் இடையேயான காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதேபோல், ஏஞ்சலின் வெகு நாட்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தாலும், அவரை பிரபலமடைய வைத்தது ‘மாமன்னன்’ படத்தின் வெற்றி விழா தான். அந்த நிகழ்ச்சியை ஏஞ்சலின் தொகுத்து வழங்கியிருந்தார். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் மாமன்னன், படத்திற்கு முன்னாடி நான் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். ஆனால், நானே நீ மெட்டீரியல் ஆகுவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இப்போது என்னை பலரும் அடையாளம் கண்டு பேசுவது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்




 


 


 


 


Tags:    

Similar News