ஓடிடி சரியா தவறா என்பது பிற்காலத்தில் தெரியவரும் - ஹிப்ஹாப் ஆதி

ஓடிடியும் ஒரு நல்ல ரீச்சை தருகிறது, திரையரங்குகளில் திரைப்படம் ஓடி முடிந்த பிறகும் பொதுமக்கள் ஓடிடியில் பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கிறது. அதேசமயம் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை இருப்பதால் திரையரங்குகளுக்கு வருகின்ற மன நிலையும் சிறிது குறைந்துள்ளது. அது சரியா தவறா என்பதை தற்போது கூற முடியாது இன்னும் சில ஆண்டுகள் போக என்ன ஆகப் போகிறது என தெரியும் என ஹிப்ஹாப் ஆதி தெரிவித்தார்.;

Update: 2024-05-26 08:59 GMT

 ஹிப்ஹாப் ஆதி செய்தியாளர் சந்திப்பு  

கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் PT SIR திரைப்பட பிரமோஷனுக்காக வருகை தந்த அத்திரைப்படத்தின் ஹீரோ ஹிப் ஹாப் ஆதி மற்றும் படக்குழுவினர் ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அப்போது ஹிப்ஹாப் ஆதி கோவை Anthem பாடலையும்,வாடி புள்ள வாடி பாடலையும் பாடினார்.இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அவருடன் இணைந்து பாடல்களை பாடினர்.பின்னர் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹிப் ஹாப் ஆதி இப்படத்தின் பிரமோசனுக்காக சுற்றி கொண்டே இருப்பதால் யாரும் தூங்கவில்லை அதனால் பார்ப்பதற்கு ஜாம்பி போல் இருக்கிறோம் இருந்தாலும் உள்ளுக்குள் எனர்ஜியாக இருப்பதாக கூறினார்.இந்த படம் காமெடி படமாக இருந்தாலும் சீரியஸான விஷயத்தை இப்படத்தில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.பெரிய நட்சத்திர நடிகர் சிறிய நட்சத்திர நடிகர் என்றெல்லாம் இல்லாமல் படம் நன்றாக இருந்தால் ஓடும் என தெரிவித்த அவர்,  ஓடிடி குறித்தான கேள்விக்கு, அதுவும் ஒரு நல்ல ரீச்சை தருகிறது எனவும் திரையரங்குகளில் திரைப்படம் ஓடி முடிந்த பிறகும் பொதுமக்கள் ஓடிடியில் பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.அதேசமயம் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை இருப்பதால் திரையரங்குகளுக்கு வருகின்ற மன நிலையும் சிறிது குறைந்துள்ளது எனவும் அது சரியா தவறா என்பதை தற்போது கூற முடியாது இன்னும் சில ஆண்டுகள் போக என்ன ஆகப் போகிறது என்பதை பார்க்கலாம் என தெரிவித்தார்.

Advertisement

இதில் பேசிய இயக்குநர் கார்த்திக் இப்படம் பெண்களுக்கு பிடிப்பதாக கூறுகின்றனர். பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளுக்கு பிறகு என்ன நடக்கிறது என்பது அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதுதான் இந்த படம் என்றார். மக்கள் தற்பொழுது திரைப்படத்தை பிரித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டனர் என தெரிவித்த அவர் கதை நன்றாக இருந்தால் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News