நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கில் திருப்பம் !!! கிணற்றில் முக்கிய தடயம் தேடும் பணி தீவிரம்....
நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கில் திருப்பம் : மர்மமான முறையில் உயிரிழந்த நெல்லை மாவட்டம் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் இல்லத்தில் தடவியல் நிபுணர்கள் ஆறாவது நாளாக சோதனை நடத்திவரும் நிலையில் அவரது செல்போன் கிணற்றில் இருக்கலாம் என தேடி வருகின்றனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன சிங் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவரது உடல் எறிந்த நிலையில் உவரி அருகே கண்டெடுக்கப்பட்டது.
இதை அடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயக்குமார் நெல்லையில் முக்கிய காங்கிரஸ் பிரமுகர் என்பதால் இது தமிழக அளவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயக்குமார் கொலை தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடம் விசாரணை நடந்த நிலையில் ஜெயக்குமாரின் மகன்கள் இருவரையும் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது உயிரிழந்தது ஜெயக்குமார் தானா என்பதை உறுதி செய்ய அவரது மகன்களிடம் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை முடிவில் வந்தவுடன் வழக்கின் அடுத்த கட்டம் நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் இல்லத்தில் தடவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றன. அவர் அது வீடு தோட்டம் ஆகியவற்றில் ஏதாவது தடையங்கள் கிடைக்குமா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
குறிப்பாக ஜெயக்குமாரின் செல்போனை கண்டுபிடிக்க சோதனையானது நடந்து வருகிறது. அது கிடைத்தால் தான் விசாரணை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் அதனை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
செல்போன் வீடு தோட்டம் உள்ளிட்டவற்றில் கிடைக்காததால் அது ஜெயக்குமாரின் தோட்டத்து கிணற்றில் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஜெயக்குமார் செல்போன் அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் கிடக்கலாம் என தகவல் வெளியான நிலையில் அதில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
11 மணி நேரத்திற்கு மேலாக கிணற்றின் நீரை வெளியேற்றி வரும் போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியை நாடியுள்ளனர். கிணற்றில் நீரூற்று இருப்பதால் தண்ணீரை எவ்வளவு வெளியேற்றினாலும் நீர் பெருக்கினால் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதன் காரணமாக தேடுதல் பணியானது தோய்வடைந்திருக்கும் நிலையில் கிணற்றில் உள்ள நீரை முழுமையாக வெளியேற்றி பிறகு செல்போனை தேடும் பணி துவங்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் கிணற்றில் செல்போனை தேடும் பணி நிச்சயம் தொடரும் எனவும் செல்போனை மீட்ட பிறகு அதிலுள்ள தடயங்கள் ஆதாரங்கள் கால் ஹிஸ்டரி புகைப்படங்கள் உள்ளிட்டவரை மீட்கும் பணி தொடங்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.