இதய அடைப்புகளை ஏற்படாமல் தடுக்கும் உணவு பொருட்கள் !!

Update: 2025-01-10 09:30 GMT

heart attacks

நமது உடலில் மிக முக்கியமான உறுப்புகளுள் ஒன்று தான் இதயம், இது துடிப்பது நின்று விட்டால் அவ்வளவுதான் உயிர் பறிப்போகும். அதனால் அதனை பாதுகாப்பாக வைத்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை தடுக்க ஒரு சில உணவுகள் உதவுகிறது. அது குறித்து தான் இப்பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

இன்றைய காலத்தில் இளம் வயதினர் கூட இதய நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுவதை பார்த்து வருகிறோம். இதற்கு முக்கிய கரணம் நமது வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்றுதான் கூற வேண்டும்.

நமது தினசரி சமையலில் தக்காளி சேர்த்து கொள்வது மிகவும் அவசியம். இதயத்திற்கு நன்மை பயக்கும் லைகோபீன் என்னும் ஆண்ட்டி ஆக்சிடெண்ட்ஸ் தக்காளியில் அதிகம் இருக்கிறது. நமது ரத்த அழுத்தத்தை குறைத்து சீராக்கி இதயத்திற்கு ஏற்படக்கூடிய அபாயத்தை தக்காளி தடுக்கிறது.

வெண்ணெய்ப்பழம் இதய ஆரோக்கியத்திற்கு உதவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இந்த கொழுப்புகள் ஆரோக்கியமான இதயத்திற்கு இன்றியமையாத உறுப்பாகும். இந்த கொழுப்புகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கெட்ட எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைப்பதுடன், எச்டிஎல் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் தமனி அடைப்பு அச்சுறுத்தல் குறைக்கப்படுவதுடன், நாள்பட்ட இதய நிலைகளும் தடுக்கப்படுகிறது.

பாதாம், வால்நட்ஸ் போன்ற நட்ஸ் வகைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இதனை நாம் தினமும் குறிப்பிட்ட அளவில் எடுத்து கொள்வதன் மூலம் ரத்த நாளங்களில் அதிகளவு கொழுப்பு படியாமல் தடுக்கப்பட்டு இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம்.

நமது தினசரி சமையலில் சேர்க்கப்படும் பூண்டில் அல்லிசின் என்னும் வேதிப்பொருள் நிறைந்திருக்கிறது. இதனை நாம் உட்கொள்ளும் பட்சத்தில் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவானது குறையும். இதன் மூலம் இதயத்தில் ஏற்படக்கூடிய அடைப்பினை தடுக்கலாம்.

ப்ரோக்கோலியில் ஏராளமான வைட்டமின்கள், நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள், ஆண்ட்டி ஆக்சிடெண்டுகள் ஆகியவை நிறைந்துள்ளது. சல்ஃபோரபீன் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இந்த ப்ரோக்கோலியில் இருக்கிறது. இவை அனைத்தும் இதயத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது.

இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஆக்சிஜனேற்றிகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்டவை இந்த பெர்ரி வகை பழங்களில் நிறைந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதனால் இதனை நாம் உட்கொள்வதன் மூலம் இதயத்தில் அடைப்பு ஏற்படாமல்' தடுக்க முடியும்.

பீட்டா குளுக்கனைக் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் சாப்பிடும் நிலையில் இது கொலஸ்ட்ரால் அளவினை குறைக்கிறது. அதே போல் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆண்ட்டி ஆக்சிடெண்ட்டுக்கள் அதிகம் நிறைந்த ஆலிவ் எண்ணெய் எடுத்து கொள்வதன் மூலமும் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

குடைமிளகாயில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஏ, சி உள்ளிட்டவை இதயத்தில் ஏற்படக்கூடிய குறைபாடுகளை குறைக்க உதவும். மேலும் இது இதய நலனை மேம்படுத்தவும் இந்த காய் உதவுகிறது, அதனால் இதனை உணவில் அவ்வப்போது சேர்த்து கொள்ளுங்கள்.

கீரை வகைகளில் இருக்கும் தாதுக்கள், வைட்டமின்கள், ஆண்ட்டி ஆக்சிடெண்டுகள் உள்ளிட்டவை உடலில் இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நலனை மேம்படுத்துகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன் மீன்களை சாப்பிடுவதன் மூலமும் வீக்கம், ரத்த அழுத்தம் குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Tags:    

Similar News