சர்க்கரை நோய்க்கு எதிரியாக விளங்கும் இன்சுலின் செடி !!
அண்மை காலங்களில் பலருக்கு சர்க்கரை நோய் பாதிப்பானது மிகவும் இளம் வயதிலேயே வந்து விடுகிறது. தவறான வாழ்க்கை முறையும், உணவு முறையும் தான் இதற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு இயற்கை சிகிச்சையாக இந்த இன்சுலின் செடி இருக்கிறது. பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய செடியாகவும் இது கருதப்படுகிறது. இந்த செடியின் இலைகளை உலர்த்தி பொடி செய்து பலரும் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இன்சுலின் செடியானது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்களை கொண்டுள்ளது என்று ஒரு மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நமது உடலில் ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தி சீராக வைத்துக்கொள்ள இது உதவுகிறது.
இந்த இலைகளை தினமும் மென்று சாப்பிடுவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். அதே போல் இது நமது உடலில் இன்சுலின் உற்பத்தியினை அதிகரிக்க பயன்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு தக்க நிவாரணத்தினை கொடுக்கும் என்று பல்வேறு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தாவரமானது இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இந்த செடியின் இலைகளில் அழற்சி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இதனை நாம் தினமும் உட்கொள்ளும் பட்சத்தில் நமது உடலில் தொற்று மற்றும் அழற்சி பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளலாம்.
இந்த இலைகள் நமது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுவதோடு, கல்லீரல் செயல்பாட்டினை மேம்படுத்தவும் உதவுகிறது. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் இதில் நிறைந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சிலர் இதனை ப்ரெஷ்ஷாக கிடைக்கும் பட்சத்தில் வாயில் போட்டு மென்று முழுங்குவார்கள். இன்னும் சிலர் இதனை பொடி செய்து வைத்து பயன்படுத்துவார்கள். மேலும் இந்த இலைகளை கொண்டு சாறு எடுத்தும் சிலர் அருந்துவார்கள்.
என்னதான் இதில் அதிகளவு நன்மைகள் நிறைந்திருந்தாலும், இந்த இலைகளை உட்கொள்ளும் முன்னர் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது.