HMPVக்கு தனி சிகிச்சைகள் எதுவும் இல்லை மூன்று முதல் நான்கு நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும் -- அமைச்சர் மா.சுப்பிரமணியன் | king news 24x7
HMPV பாதிப்பு மற்றும் தாக்கம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம் அவசர நிலை வந்தால் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து அறிவுறுத்தல் வருவது வழக்கம் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த அறிவுறுத்தலும் வரவில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்தும் நேற்று மாலை வரை எந்த அறிவுறுத்தல்களும் வரவில்லை , HMPV தொற்று குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை HMPV ஒன்றும் புதிய வைரஸ் அல்ல, இது குறித்து அச்சப்பட வேண்டியதில்லை ..
2001ல் HMPV முதல்முறையாக கண்டறியப்பட்டது தான் இந்த வைரஸ் 3 முதல் 5 நாட்கள் சளி, இருமல் போன்ற சிறிய பாதிப்புகள் இருக்கும் HMPVக்கு தனி சிகிச்சைகள் எதுவும் இல்லை மூன்று முதல் நான்கு நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும் தமிழ்நாட்டில் சேலத்தில் ஒருவரும், சென்னையில் ஒருவரும் பாதிப்பு, இருவரும் நலமுடன் உள்ளனர் வைரஸ் குறித்து வரும் வதந்திகள் மக்களை அச்சமடைய செய்துள்ளது சீனாவில் இருந்து தமிழர் ஒருவர் வெளியிட்ட காணொலியில் அங்கு சகஜ நிலை நிலவுவதை கூறியுள்ளார்
- அமைச்சர் மா.சுப்பிரமணியன்