வக்பு திருத்த சட்டம்: இடைக்கால தடை தொடரும்: உச்சநீதிமன்றம்
வக்பு சட்டதிருத்தத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
waqf
வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும், "புதிய வக்பு சட்டப்படி எந்த உறுப்பினர் நியமனமும் இருக்கக் கூடாது எனவும் வக்பு என பதியப்பட்ட, வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வக்பு சட்டதிருத்தத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்பு சட்டதிருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணை மே 20 ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. Waqf Amendment Act Supreme Court வக்பு போர்டு உச்சநீதிமன்றம்இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்கவுள்ளது. இந்த வழக்கை முன்னதாக முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரித்து வந்தார், அவர் மே 13 அன்று பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.