அமர்நாத் யாத்திரையில் சோகம்- நிலச்சரிவில் சிக்கிய பக்தர்கள்! ஒருவர் பலி!!
அமர்நாத் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார், மூன்று பேர் காயமடைந்தனர்.;
By : King 24x7 Desk
Update: 2025-07-17 04:50 GMT
Amarnath
ஜூலை 3 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முடிவடையவுள்ளது. முதல் 16 நாட்களில் 2,47,313 க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித குகைக் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் காண்டர்பால் மாவட்டத்தில் உள்ள ரயில்பத்ரி பகுதியில், அமர்நாத் யாத்திரையின் பால்டல் பாதையில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். இறந்தவர் ராஜஸ்தானைச் சேர்ந்த சோனா பாய் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளது. ரெயில்பத்ரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு யாத்ரீகர்கள் கீழ்நோக்கி அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் பால்டால் அடிப்படை முகாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே சோனா பாய் உயிரிழந்தார்.