தபால் பெட்டிக்கு குட் பை... இனி ஸ்பீடு போஸ்ட்தான்: தபால் துறை அதிரடி அறிவிப்பு!!
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய மக்களின் பயன்பாட்டில் இருந்த பதிவு தபால் சேவை (Registered Post) வரும் செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்படுவதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2025-08-06 04:12 GMT
post box
இண்டெர்நெல், செல்போன், மெசேஜ், இமெயிலால் கடிதப் போக்குவரத்து குறைந்து வருகிறது. பதிவு தபால்களின் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்ததையடுத்து, ஒரே முறையில் தபால்களை ஒன்றிணைக்க இவ்வாறு செய்வதாக இந்திய தபால் துறை விளக்கம் அளித்துள்ளது. பதிவு தபால் சேவையின் மீது மக்களின் ஆர்வம் குறைந்துள்ளதால், இந்த சேவையை நிறுத்த அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பதிவு தபால் முறையை வரும் செப்.1ம் தேதியில் இருந்து நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது இந்திய தபால் துறை. ஸ்பீடு போஸ்ட் மட்டுமே செயலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.