ரயில்வே ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! வெளியானது போனஸ் அறிவிப்பு!!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க PM மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-09-24 12:55 GMT

தென்னைக ரயில்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. போனஸ் வழங்க அரசுக்கு கூடுதலாக ரூ.1,865 கோடி செலவாகும் என்றும், 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம், ரூ.1,865 கோடி செலவினம் ஏற்படுவதோடு, தண்டவாளம் பராமரிப்பாளர், லோகோ பைலட்கள், ரயில்வே மேலாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்பட 11 லட்சம் பேர் இதனால் பயனடைவர். கடந்த ஆண்டு மோடி தலைமையிலான அரசு 2,029 கோடி ரூபாய் அளவிலான போனஸை வழங்கியது. அப்போது சுமார் 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்கள் இதன் பலனைப் பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை மற்றும் தசரா போன்ற பண்டிகைகளுக்கு சற்று முன்பாக ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இதன் படி இந்த ஆண்டுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

Similar News