டெல்லியில் 3 மாணவர்கள் மரணம் - 13 பயிற்சி மையங்களுக்கு மாநகராட்சி சீல் !!

Update: 2024-07-29 07:03 GMT
டெல்லியில் 3 மாணவர்கள் மரணம் - 13 பயிற்சி மையங்களுக்கு மாநகராட்சி சீல் !!

மரணம்

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தலைநகரம் டெல்லியில் கனமழை காரணமாக டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் ரவு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக டெல்லியில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்துக்குள் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது.

அங்குதான் பயிற்சி மையத்தின் நூலகம் செயல்பட்டு வந்துள்ளது. இதனால், அங்கு குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஏராளமான மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதில், 2 மாணவிகள், ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் பயிற்சி மையத்தின் உரிமையாளரான அபிஷேக் குப்தா மற்றும் ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோர் குற்றமற்ற கொலை மற்றும் கவனக்குறைவு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 3 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, சம்பவம் குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்கள் தானியா சோனி (25), ஸ்ரேயா யாதவ் (25), நெவின் டால்வின் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி பழைய ராஜீந்தர் நகர் பகுதியில் இயங்கிவந்த 13 பயிற்சி மையங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது. சட்டவிரோதமாக இயங்கியதாகக் கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News