புது வகை வைரஸ் - 4 வயது சிறுமி உயிரிழப்பு !!

Update: 2024-07-19 06:35 GMT

 சண்டிபுரா வைரஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸால் நாலு வயது சிறுமி உயிரிழந்தார். இந்த வைரஸால் ஏற்பட்ட முதல் மரணம் என்று மாநில சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

மாநிலத்தில் 14 நோயாளிகள் தொற்று நோய் ஏற்பட்டு இருந்திருக்கலாம் இன்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் வைரசால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆர்எஸ் தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை இந்த சண்டிபுரா வைரஸ் காய்ச்சல் மற்றும் கடுமையான மூளை அலர்ஜி அறிகுறிகளைக் கொண்டுள்ளது.

சபர் காந்தா மாவட்டத்தில் உள்ள ஹிமட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் நாலு வயது சிறுமி வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். சிறுமியின் மாதிரி பரிசோதனை செய்ததில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது மாநிலத்தில் சண்டி புறா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட முதல் மரணம் என்று சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News