ADMK vs BJP: பக்காவா பிளான் போட்டு அதிமுக தலைகளை தட்டி தூக்கிய பாஜக - அதிர்ச்சியில் இபிஎஸ்

ரபரப்பான சூழலில் அதிமுகாவின் முன்னாள் அமைச்சர் உட்பட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர். 

Update: 2024-02-07 13:53 GMT

AIADMK, BJP 

ADMK vs BJP: ADMK vs BJP: பக்காவா பிளான் போட்டு அதிமுக தலைகளை தட்டி தூக்கிய பாஜக - அதிர்ச்சியில் இபிஎஸ்நாடாளுமன்ற தேர்தலல நாடே பரபரப்பாகி இருக்கும் சூழலில்,  அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்  டெல்லியில் பாஜகவில் இணைய உள்ளனர். 

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக புதிய யுக்திகளை கையாண்டு வருகிறது. அதேநேரம், இந்த முறை பாஜகவை தோற்கடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. எனினும், வடமாநிலங்களில் கைகள் ஓங்கி இருக்கும் பாஜகவுக்கு தென்னிந்தியாவில் பின்னடைவு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. 

அதனால், இந்த தேர்தலில் பாஜகவின் பார்வை தன் தமிழகம் மீது விழுந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் காலூன்றுவதற்கான காய்களை திட்டம்போட்டு நகர்த்தி வருகிறது பாஜக தலைமை. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களாக என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னையில் வரும் 11ம் தேதி நடைபெறும் பயணத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்கிறார். 25ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 

இதற்கிடையே, இன்று டெல்லிக்கு சென்ற அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தமிழக அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் அதிமுகாவின் முன்னாள் அமைச்சர் உட்பட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர். 

1. கு.வடிவேல் - கரூர்

2. P.S. கந்தசாமி - அரவக்குறிச்சி

3. கோமதி சீனிவாசன் (முன்னாள் அமைச்சர்) - வலங்கைமான்

4. R.சின்னசாமி -சிங்காநல்லூர

5. R. துரைசாமி (எ) சேலஞ்சர் துரை -கோயம்புத்தூர்

6. M.V.ரத்தினம் - பொள்ளாச்சி

7. S.M.வாசன் - வேடச்சந்தூர்

8. S.முத்துகிருஷ்ணன் - கன்னியாகுமரி

9. P.S. அருள் - புவனகிரி

10. N.R.ராஜேந்திரன் - காட்டுமன்னார்கோவில்

11. R.தங்கராசு - ஆண்டிமடம் (காங்கிரஸ்)

12. குருநாதன் - பாலயம்கோட்டை (திமுக)

13. V.R. ஜெயராமன் - தேனி

14. செல்வி முருகேசன் - காங்கேயம்

15. ரோகிணி - கொளத்தூர்16. தமிழகன் - திட்டக்குடி17. வெங்கடாச்சலம் - சேலம்18. குழந்தைவேலு - சிதம்பரம் (திமுக)

உள்ளிட்ட 18 பேர் டெல்லி தலைமை அலுவலகத்தில் பாஜகவில் இணைந்தனர். 

இதற்கு முன்னதாக அதிமுகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை கூட்டணியும் இல்லை என்று திட்டவட்டமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனாலும், கூட்டணியில் இணைந்து கொள்ள அதிமுகவுக்கு பாஜகவின் கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஒருபக்கம், ஓ.பன்னீர் செல்வம் ஒருபக்கம், டிடிவி தினகரன் ஒருபக்கம் என அதிமுக கட்சி சிதறியுள்ளது. இதில் கட்சி எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதால், வேறு வழியில்லாமல் சசிகலா மற்றும் பாஜகவின் ஆதரவை ஓ.பன்னீசெல்வம் நாடி வருகிறார். இதற்கிடையே அதிமுகவின் பிளவு கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. 

இப்படியான சூழலில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்து அதிமுகவுக்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளனர். அதேநேரம், பலமான தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக அடுத்தக்கட்ட முடிவு குறித்து ஆலோசித்து வருகிறது. 

இந்த அரசியல் சதுரங்க விளையாட்டில் யார் மக்கள் மனதை வெல்லப்போகிறார்கள் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும். 

Tags:    

Similar News