அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் !
Update: 2024-07-13 06:19 GMT
அம்பானி - ராதிகா மெர்சண்ட்
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி (29) - ராதிகா மெர்சண்ட் திருமணத்தையொட்டி, மும்பை விழா கோலம் பூண்டுள்ளது. திருமண விழாவின்போது, மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வாக்குறுதி கொடுத்துக் கொண்டனர். திருமண மண்டபத்தில் நின்று, இருவருக்கும் பிரத்யேகமாக எழுதப்பட்ட வாக்குறுதிகளை வாசித்தனர். அன்பும், ஒற்றுமையும் நிறைந்த பாதுகாப்பான இடமாக வீடு இருக்கும் என்று ராதிகா தெரிவித்த நிலையில், அவருடன் சேர்ந்து தனது கனவுகளின் வீட்டை கட்டுவதாக அனந்த் அம்பானி உறுதியளித்தார்.