வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு!

Update: 2024-08-08 11:00 GMT

இந்திய விசா

வங்கத தேச வாழ் இந்தியர்கள் அகதிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்திய- வங்கதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றனர். அவர்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்துநிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர் போராட்டத்தால் வங்கதசே பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். வங்கதேச பார்லிமென்ட் கலைக்கப்பட்டு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி அமைக்க உள்ளது.

Advertisement

வங்கதேச வாழ் இந்தியர்கள் அகதிகளாக தஞ்சம் கேட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்திய -வங்க தேச எல்லையான மேற்கவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் சத்குரா கிராமம் வழியாக இந்தியாவிற்கு நுழைய முயன்றனர். அவர்களை பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் எல்லையில் அவர்கள் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் நிலவும் 'நிலையற்ற சூழ்நிலை' காரணமாக அனைத்து இந்திய விசா விண்ணப்ப மையங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News