இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்!
இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக இரண்டு பேரை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-03-14 09:18 GMT
தேர்தல் ஆணையாம்
இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக இரண்டு பேரை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அதன்படி அருண் கோயில் மற்றும் அனுச்சந்திர பாண்டே ஆகியோர் தேர்தல் ஆணையராக இருந்தனர்.
அனுச்சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனை அடுத்து தற்போது அருள் கோயில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை கடந்த 9ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மவிடம் வழங்கினார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமர் மோடி தலைமையிலான மூன்று பேர் கொண்ட உயர்மட்ட தேர்வு வாரியத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது.
அதன்படி கேரளாவைச் சேர்ந்த ஞானேஷ் குமார் பஞ்சாப்பை சேர்ந்த சந்து ஆகியோ தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.