டெல்லியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு- பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவு!!

டெல்லியில் பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவாகியுள்ளது.;

Update: 2025-02-05 10:22 GMT

Vote

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது. டெல்லி சட்டசபைக்கான வாக்குப்பதிவு காலை தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால், முதல்-மந்திரி அதிஷி, முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.  டெல்லி சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.10 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி 19.95 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. பகல் 1 மணி நிலவரப்படி டெல்லியில் 33.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News