சட்டசபைத் தேர்தல் : கூட்டணி கட்சிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சு !

Update: 2024-06-25 06:12 GMT

 ராஜ்நாத் சிங்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

18 - ஆவது நாடாளுமன்ற கூட்டுத்தொடர் வருகிற  ஜூலை - 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறும். மக்களவை சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனு இன்று 12 மணியுடன் நிறைவடைகிறது. லோக்சபா சபாநாயகர் பதவிக்கான வேட்பாளரை ஆளும் பாஜக கூட்டணி இன்னும் அறிவிக்கவில்லை. 17-வது லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, தற்போதைய லோக்சபாவின் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப், தற்காலிக துணை சபாநாயகர் ராதாமோகன் சிங், புரந்தேஸ்வரி ஆகியோரில் ஒருவரை பாஜக தரப்பு லோக்சபா சபாநாயகர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளது.

"இந்தியா" கூட்டணியைப் பொறுத்தவரை லோக்சபா சபாநாயகர் பதவி என்பது போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு தரப்பு எந்த ஒரு பேச்சுவார்த்தையையும் எதிர்க்கட்சிகளுடன் நடத்த முன்வரவில்லை என அந்த அணியின் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இடதுசாரி கட்சிகளில் ஒன்றான புரட்சிகர சோசலிஸ்ட், இந்தியா கூட்டணி சார்பில் லோக்சபா சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகளுக்கான தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜுஜூ உள்ளிட்டோர் அடங்கிய குழு நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் போட்டியின்றி லோக்சபா சபாநாயகரை தேர்வு செய்ய மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

Tags:    

Similar News