தேர்தல் காலத்தில் மதங்களை அரசியலாக்குவதை தவிர்க்க வேண்டும் - மம்தா பானர்ஜி
Update: 2023-12-29 05:58 GMT
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சக்லா நகரில் உள்ள பாபா லோக்நாத் கோயிலுக்கு, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சென்றார்.
அப்போது அவர், “அனைத்து மதங்களையும் நாம் மதிக்க வேண்டும். உலகில் உள்ள எந்த மதமும் வன்முறையை போதிக்கவில்லை. இரக்க மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்றும் அன்பு மற்றும் சகோதரத்துவத்தை பரப்ப வேண்டும் என்றும் தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. தேர்தல் நெருங்கும்போது மட்டும் மதங்களை மதிப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தேர்தல் காலத்தில் மதங்களை அரசியலாக்குவதை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.