பாபர் மசூதி இடிப்பு தினம்.. இன்று [06/12/2024]

Update: 2024-12-06 12:00 GMT
கருப்பு தினம் 

 பாபர் மசூதி இடிப்பு தினம்.. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு..

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கரசேவர்களால் கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் பாபர் மசூதி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. எனவே டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,



பாபர் மசூதி தகர்ப்பு) என்பது டிசம்பர் 6, 1992 அன்று இந்தியாவின் உத்திரப் பிரதேசத்திலுள்ள, அயோத்தியின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை, இராமர் பிறந்த இடத்தைக் (இராமஜென்மபூமி) கைப்பற்றும் பொருட்டு இந்துக் கரசேவகர்கள் அழித்ததைக் குறிக்கும். இந்த அழிப்பினால் விளைந்த இந்து இஸ்லாமிய மதக்கலவரங்கள் பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இவற்றினால் ஏறத்தாழ 2,000 பேர் உயிரிழந்தனர்.

அயோத்தி நகரம் கடவுள்-அரசர் இராமர் பிறந்த இடமென்றும் இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.1528இல் முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் ஒரு மசூதி கட்டப்பட்டது. அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே, மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்கள் நம்புகின்றனர். பல ஆண்டுகளாக இவ்விடம் இந்துக்களாலும் ,இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுவந்தது.இந்திய விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி வழக்குகள் தொடர்ந்தன.

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 1989 தேர்தலின் போது அயோத்திச் சிக்கலை (அயோத்தி பிரச்சனை) தேர்தல் களத்தில் பரப்புரைக்காகப் பயன்படுத்தியது.செப்டம்பர் 1990இல் பாஜக தலைவர் எல். கே. அத்வானி அயோத்திச் சிக்கலை நாடெங்கும் எடுத்துச் செல்லும்பொருட்டு ஓர் இரதப் பயணத்தைத் (இரத யாத்திரை) தொடங்கினார். இதனால் நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

1992 டிசம்பர் முதல் வாரத்தில் நாடெங்கிலிருந்தும் கரசேவகர்கள் அயோத்தியில் வந்து குவிந்தனர். அவர்களால் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இடிப்பு நிகழ்வுகளை விவரிக்கும் லிபரான் குழு அறிக்கை அத்வானி, ஜோஷி, விஜய் ராஜே சிந்தியா ஆகியோர் கரசேவகர்களை மசூதி மேலிருந்து கீழே இறங்கும்படி சுரத்தற்ற வேண்டுகோள்கள் விடுத்தனர் என்று சொல்கிறது. நல்லெண்ணத்துடன் இதைச் செய்தார்களா அல்லது ஊடகங்களின் கண் துடைப்புக்காகச் செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் கரசேவகர்களை கருவறைக்குள் நுழைய வேண்டாமென்றோ கட்டிடத்தை இடிக்க வேண்டாமென்றோ யாரும் கேட்டுக் கொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் கேட்டுக் கொள்ளாதது அவர்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தை இடித்து விடவேண்டுமென்பதே அவர்கள் உண்மை அவா என்பதைக் காட்டுவதாக அந்த அறிக்கை சொல்கிறது. ராம் கதா குஞ்சில் இருந்த இவ்வியக்கத்தின் தலைவர்கள் நினைத்திருந்தால் எளிதாக மசூதி இடிப்பைத் தடை செய்திருக்க முடியுமென்றும் லிபரான் அறிக்கை கூறுகிறது.

இந்நிகழ்வின் புகைப்படங்களும் காணொளிகளும் மிகவும் கோபம் கொண்ட மக்கள் கூட்டம் நிகழ்விடத்தைத் தாக்கி அழித்ததைக் காட்டுகின்றன. மதிய வேளையில், இளைஞர் சிலர் மசூதியின் மீது ஏறி நின்று கொடிகளைப் பொருத்தியும், தடிகளால் மசூதியை அடித்தும் இருந்தனர். அவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாகக் கீழிருந்தவர்களுக்குச் சைகைகளைக் காட்டினர். கையில் கிடைத்தவற்றை வைத்தே மக்கள்கூட்டம் அவ்வமைப்பினைச் சேதப்படுத்தியது.



மசூதியின் இடிப்பு நாடு முழுவதும் இஸ்லாமியர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், பல மாதங்களாக இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களும் ஒருவரையொருவர் தாக்குவதும் வீடுகளுக்குத் தீ வைப்பதும் கடைகளையும் வழிபாட்டுத் தலங்களையும் சேதப்படுத்துவதுமாக இருந்துவந்தது. இக்கலவரம் மும்பை, சூரத், அகமதாபாத், கான்பூர், டெல்லி போன்ற இன்னும் பல நகரங்களுக்கும் பரவி கிட்டத்தட்ட 1,500 பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது.டிசம்பர் 1992இலும் சனவரி 1993இலும் ஏற்பட்ட மும்பைக் கலவரங்களில் மட்டும் 900 மக்கள் உயிரிழந்தனர். மேலும் ₹ 9,000 கோடி ($ 3.6 பில்லியன்) மதிப்பிலான பொருட்சேதமும் ஏற்பட்டது.[3][4] மசூதி இடிப்பும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரங்களுமே 1993ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நிகழ்ந்துவந்த கலவரங்களுக்கும் முதன்மையான காரணங்களாக இருந்தன.[5] இந்தியன் முஜாகுதீன் போன்ற இயக்கங்கள் தங்கள் தீவிரவாதத் தாக்குதல்களுக்கான காரணமாக பாபர் மசூதி இடிப்பைக் குறிப்பிட்டன.

தஸ்லிமா நசுரீன் தான் எழுதிய லஜ்ஜா எனும் சர்ச்சைக்குரிய புதினத்தில் இடிப்புக்குப் பிந்தைய நாட்களை மையமாக வைத்துக் கதையை அமைத்திருந்தார். இப்புதின வெளியீட்டுக்குப் பின் அவருக்குக் கொலைமிரட்டல்கள் வந்தன. அதன்பின் அவர் வங்காளதேசத்தை விட்டு வெளியேறி நாடுகடந்து வாழ்ந்துவருகிறார். பாம்பே (1995), தைவானமதில் (2005) போன்ற படங்கள் மசூதி இடிப்பினால் உருவான கலவரங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ளன. இரு படங்களுமே தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருதினைப் பெற்றன.






பாபர் மசூதி இடிப்பை விடுதலையாக கருதும் இந்து மதத்தினர்களின்  மத்தியில் இன்றளவும் பாபர் மசூதி இடிப்பை கருப்பு தினமாக அனுசரிக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.


Tags:    

Similar News