கலப்பட நெய்; 3 நிறுவனங்களுக்கு தடை!!
கேரளாவில் 3 வகை நெய் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2024-09-25 07:25 GMT
Ghee
திருப்பதி லட்டில் கலப்பட நெய் சேர்க்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து கேரளாவில் விற்பனை செய்யப்படும் நெய் வகைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் கேரளாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஜோய்ஸ், மேன்மா, எஸ்.ஆர்.எஸ். ஆகிய நிறுவனத்தினர் நெய்யுடன் தாவர எண்ணெய், வனஸ்பதி ஆகியவை சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த 3 வகை நெய் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.