3 வது முறையாக முதவராக பொறுப்பேற்ற பெமா காண்டு!
அருணாச்சல் பிரதேச முதல்வராக பாஜகவை சேர்ந்த பெமா காண்டு மூன்றாவது முறையாக இன்று மீண்டும் பதிவேற்றுக் கொண்டார்.
அருணாச்சல பிரதேச சட்டசபைக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., 46 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. என்பிபி கட்சி 6 என்சிபி 3, அருணாச்சல மக்கள் கட்சி 2, காங்., 1, சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
நேற்று, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பெமா காண்டு,, சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து இன்று நடந்த பதவியேற்பு விழாவில் பெமா காண்டு முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். தலைநகர் இடா நகரில் உள்ள டி.கே மாநாட்டு மையத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. செளனா மெயின் துணை முதல்வராக பதவியேற்றார். மேலும் 10 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அருணாச்சல் மாநில ஆளுநர் கே.டி.பர்னாயிக் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தனர். பதவியேற்பு விழாவில் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் ஆகிய மத்திய அமைசர்கள் பங்கேற்றனர்.