தேர்தலில் முறைகேடு நடந்ததாக தேர்தல் ஆணையத்திற்கு பிஜூ ஜனதா தளம் கடிதம்!!

ட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு பிஜூ ஜனதா தளம் கடிதம் எழுதியுள்ளது.

Update: 2024-12-24 11:13 GMT

bjd

ஒடிசா மாநில சட்டசபை தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 78 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பிஜூ ஜனதா தளம் 51 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு பிஜூ ஜனதா தளம் கடிதம் எழுதியுள்ளது. ஒடிசாவில் நடைபெற்ற சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதத்திற்கும் எண்ணப்பட்ட வாக்குகளின் சதவீதத்திற்கும் இடையே 30 சதவீதத்திற்கும் அதிகமாக வித்தியாசம் இருந்ததாக தேர்தல் ஆணையத்திடம் பிஜூ ஜனதா தளம் குற்றச்சாட்டு கூறியுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் உள்ள எண்ணிக்கையில் பெரிய அளவு மாறுபாடு இருப்பது ஏன் என்ற கேள்வியை பிஜூ ஜனதா தளம் எழுப்பி உள்ளது. மேலும், தலைமை தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News