பாஜக முதலிடம்..! அடுத்தடுத்து காங்கிரஸ் திமுக..!

எஸ் பி ஐ வழங்கிய தேர்தல் பத்திர தரவுகளை இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட்டுள்ளது.

Update: 2024-03-15 05:31 GMT

தேர்தல் பத்திர தரவு

எஸ் பி ஐ வழங்கிய தேர்தல் பத்திர தரவுகளை இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு அதிகபட்சமாக 1300 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளது லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனம்.

வேதாந்தா நிறுவனமும் 375 கோடி நன்கொடையை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக 6060 கோடி ரூபாய் நிதியை பாஜக பெற்று முதலிடத்தை வகிக்கிறது.

காங்கிரஸ் 1420 கோடியும், திமுக 639 கோடியும் அதிமுக 6 கோடி ரூபாய் நிதி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் அளித்த விவரங்கள் பட்டியலில் அதானி அம்பானியின் நிறுவனங்களில் விவரங்கள் இல்லை.

புல்வாமா தாக்குதலின் பிறகு பாகிஸ்தான் நிறுவனத்திடம் இருந்து கட்சிகள் நிதி உதவி பெற்றதும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 100 கோடி வழங்கிய நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தில் மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் கோஷல் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

Similar News