பிப்.29ல் பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்
தேசிய அளவிலான பாஜக மக்களவை தொகுதி வேட்பாளர் பட்டியல் வரும் 29ம் தேதி வெளியிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.;
Update: 2024-02-24 19:26 GMT
பிரதமர் நரேந்திர மோடி
பாஜகவின் முதல் கட்ட பட்டியலில் 100 முதல் 120 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெயர் 29ஆம் தேதி வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் மையக்குழுக் கூட்டம் 29 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.