டெல்லியில் மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

டெல்லியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-12-13 08:52 GMT

bomb threat

டெல்லியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பள்ளிகளில் சோதனை நடத்தப்படுகிறது. கடந்த டிசம்பர் 9 ஆம் தேதியில் இருந்து கிட்டத்தட்ட 44 பள்ளிகளுக்கு இதேபோல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் அவை வெறும் புரளி தான் என்று தெரியவந்தது. இன்றைய வெடிகுண்டு மிரட்டல் குறித்து பேசிய தீயணைப்புத் துறை அதிகாரி, பசிம் விகாரில் உள்ள பட்நகர் சர்வதேச பள்ளி, ஸ்ரீனிவாஸ் பூரியில் உள்ள கேம்பிர்ட்ஸ் பிள்ளி மற்றும் டிபிஎஸ் அமர் காலனியில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார். வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் மோப்ப நாய் படைகளுடன் பள்ளிகளுக்கு வந்து சோதனை நடத்தினர்.

Tags:    

Similar News