இயந்திரங்களை சரிபார்க்க செலவுத்தொகையை கட்டி வேட்பாளர்கள் விண்ணப்பிக்கலாம்: உச்சநீதிமன்றம்!
Update: 2024-04-26 09:11 GMT
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ கோரிக்கையை வேட்பாளர்கள் வைக்கலாம்
சரிபார்க்க வேண்டிய இயந்திரங்களை வாக்குச்சாவடி வரிசை எண் மூலம் வேட்பாளர்கள் அடையாளம் காண வேண்டும்
பொறியாளர்களின் பரிசோதனையின்போது வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் உடனிருக்கலாம்
இயந்திரங்களில் முறைகேடு கண்டறியப்பட்டால் வேட்பாளர் கட்டிய செலவுத்தொகை திருப்பித் தரப்படும்
தேர்தல் முடிவுகளில் 2 மற்றும் 3-வது இடம் பெரும் வேட்பாளர்கள் இயந்திரங்களை சரிபார்க்க செலவுத்தொகை கட்டி விண்ணப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.