திருச்சி விமான விவகாரம்; விமான போக்குவரத்து துறை அமைச்சர் அறிக்கை!!

திருச்சியில் விமானம் நடுவானில் வட்டமடித்த சம்பவம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-10-12 11:40 GMT

Air India Sharjah-Bound Flight 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.40 மணியளவில் சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரமாக நடுவானிலேயே வட்டமடித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. சுமார் 8.15 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறங்கியதை அடுத்து அனைவரும் பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில், விமானம் நடுவானில் வட்டமடித்த சம்பவம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டதால் திருச்சி விமான நிலையத்திற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து மாலை 6.05 மணியளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு 8.15 மணிக்கு விமானம் தரையிறங்கியதாக குழு தெரிவித்தது. இதை அடுத்து விமானத்தை முழுமையாக ஆய்வு செய்ய டிஜிசிஏ அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Tags:    

Similar News