உ.பி.க்கு ரூ.31,962 கோடி; தமிழகத்திதிற்கு ரூ.7,268 கோடி; மாநிலங்களுக்கு நிதி பகிர்வை விடுவித்தது ஒன்றிய அரசு!!

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது.

Update: 2024-10-10 11:33 GMT

Central Govt

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது. அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதல் தவணையாக ரூ.89,086 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இந்த வெளியீடு வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்கும், அவற்றின் வளர்ச்சி/நலன் சார்ந்த செலவினங்களுக்கும் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. இதில் அதிகபட்சமாக, உத்திரப்பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடியும், பிகார் மாநிலத்திற்கு ரூ.17,921 கோடியும், மத்தியபிரதேசத்திற்கு ரூ.13,987, மேற்கு வங்க மாநிலத்திற்கு ரூ.13,404 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ரூ.7,268 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.7,211 கோடியும், கர்நாடகாவுக்கு 6,498 கோடியும், கேரளாவிற்கு ரூ.3,430 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News