சந்திரபாபு நாயுடு உறுதி! நிதிஷ் குமாரின் டிமாண்ட் !

Update: 2024-06-05 06:14 GMT

சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார்

நாடு முழுவதும் 543 தொகுதிகளில் 7 கட்டங்களாக லோக்சபா நடந்து முடிந்துள்ளது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டது. 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.

இந்நிலையில் மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு ஆதரவு தர வேண்டும் என்றால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் முக்கியமான சில முக்கிய கோரிக்கைகளை பாஜகவிற்கு வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.

மத்திய அமைச்சரவையில் நிதி துறை, உள்துறை உள்ளிட்ட இடம், ஆந்திராவில் புதிய தலைமையகம், சபாநாயகர் பதவி உள்ளிட்ட கோரிக்கைக்களை வைக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

இருப்பினும் ''பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன். இன்று (ஜூன் 5) மாலை நடைபெற உள்ள கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்'' என ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை, சபாநாயகர் பதவி உள்ளிட்ட நிபந்தனைகள் விதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News