நீட் தேர்வில் தவறு இருந்தால் ஒப்புக்கொள்ள வேண்டும் - உச்சநீதிமன்றம்

Update: 2024-06-18 08:40 GMT

நீட் தேர்வு

நீட் தேர்வில் தவறு இருந்தால் மத்திய அரசும் தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

''தேர்வுக்கு தயாராகும் குழந்தைகளின் உழைப்பை நாம் மறக்கக் கூடாது.

நீட் தேர்வு விவகாரத்தில் 0.001 சதவிகிதம் யாராவது அலட்சியமாக இருந்தாலும், அது முழுமையாக ஆராயப்பட வேண்டும்.

ஒரு தனிநபர் ஒட்டு மொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறி இருக்கக்கூடிய சூழலை யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை 2 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Tags:    

Similar News