தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நியமனத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!!

தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நியமனத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Update: 2024-12-24 11:20 GMT

Congress

தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி அருண்குமார் மிஸ்ராவின் பதவி காலம் கடந்த ஜூன் 1-ந்தேதி முடிவடைந்தது. இதற்கிடையே தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து ஜனாதிபதி திரவு பதி முர்மு நேற்று அறிவித்தார். ராமசுப்பிரமணியன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். மேலும் பிரியங்க் கனூங்கோ மற்றும் டாக்டர் பித்யுத் ரஞ்சன் சாரங்கி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த நியமனத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர், தேர்வு குழுவால் பாரபட்சம் இல்லாமல் நியமனங்கள் செய்யப்பட வேண்டும். இந்த நியமனம் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகும். இதில் பரஸ்பர ஆலோசனை மற்றும் ஒருமித்த பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. விவாதத்தை ஊக்குவிப்பதற்கும், ஒரு கூட்டு முடிவை உறுதி செய்வதற்கும் பதிலாக, கூட்டத்தின்போது எழுப்பப்பட்ட நியாயமான கவலைகள் மற்றும் முன்னோக்குகளைப் புறக்கணித்து, பெயர்களை இறுதி செய்வதற்கு தேர்வு குழு அதன் உறுப்பினர்களின் பெரும்பான்மையை நம்பியுள்ளது. தேர்வு செயல்முறை அடிப்படையில் குறைபாடு உள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் நம்பகத்தன்மை, செயல்திறன் இந்தியாவின் அரசியலமைப்பு நெறிமுறைகளை வரையறுக்கும் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய தன்மையை பொறுத்தது. நாங்கள் முன்மொழிந்த பெயர்கள் இந்த உணர்வைப் பிரதிபலிக்கின்றன மற்றும் ஆணையத்தின் அடிப்படைக் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றன என்றனர். தலைவர் பதவிக்கு முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரோஹின்டன் பாலி நாரிமன், கே.எம்.ஜோசப் ஆகியோரை காங்கிரஸ் தலைவர்கள் முன்மொழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News