காங்கிரஸ் இந்து மதத்திற்கு எதிரானது அல்ல - பிரியங்கா காந்தி அழுத்தம்
அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையில் பங்கேற்காத காரணத்தால் எங்களை இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என கூறுவதை ஏற்க முடியாது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி அங்கு பிரச்சாரம் செய்த போது, " எங்களை இந்து மதத்திற்கு எதிரானவர்கள் மதவிரோதி என்று குற்றம் சாட்டுகின்றனர். ராமர் கோயில் பிரதிஷ்டையில் பங்கேற்காததால் இவ்வாறு கூறுகின்றனர். ஆனால் நாங்கள் இறக்கும் போது 'ஹேராம்' என்று கூறிய காந்தியின் வழியை தான் பின்பற்றி வருகிறோம்.
உத்திரபிரதேசத்தின் கோசலைகளின் நிலைகளை பாருங்கள். இறந்த ஒரு பசுவின் இறைச்சியை நாய் உண்ணும் வீடியோ வெளியாகி இருக்கிறது. மத விரோதிகள் என கூறும் இந்து மத பாதுகாப்பாளர்களாக இருக்கும் அவர்கள் கோசாலைகளின் பரிதாப நிலையை கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் ரேபரேலி தொகுதிக்கும் காங்கிரசுக்கும் ஒரு நீண்ட வந்து உள்ளது என தெரிவித்த அவர் இது தொடர்ந்து நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.