பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார்!

Update: 2024-04-08 11:01 GMT

பிரதமர் மோடி

இந்தியாவின் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த வாரம் காங்கிரஸ் தலைமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி ராணுவ விமானங்களை பயன்படுத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் கட்சியின் சிந்தனைகள் பிரதிபலிப்பதாக கூறி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருவதற்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். 

Tags:    

Similar News