அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் விலக்கு!
எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுப்போம் - அமலாக்கத்துறை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக இதுவரை ஐந்து சம்மன்கள் அனுப்பப்பட்டன. இதுவரை அனுப்பப்பட்ட சம்பந்தங்கள் எதற்கும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் ஒரு மனு கூடுதல் தலைமை பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை பெருநகர் நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (17.02.2024) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தது.
இதனிடையே டெல்லி சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டுத்தொடர் நடைபெற இருப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது தீர்மானம் நடைபெற இருப்பதாகவும் இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அவர் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து கெஜ்ரிவாலின் கோரிக்கையை ஏற்ற டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு விலக்கு அளித்து விசாரணையை மார்ச் 16ஆம் தேதிக்கு தலை வைத்தது. மேலும் இந்த விசாரணையில் காணொளி வாயிலாக ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும் அமலாக்கத்துறை தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும் ஏற்கனவே 19ஆம் தேதி ஆஜராக கோரி சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை மறுதினம் அமலாக்க துறையின் சம்மனை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.