பிரதமர் மோடிக்கு வந்தகொலை மிரட்டல் - தீவிரம் காட்டும் சைபர் கிரைம்!

Update: 2024-05-24 08:12 GMT

பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் குறித்து சென்னை சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலை மிரட்டல் விடுத்த நபரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் பிரதமர் மோடியை கொலை செய்து விடுவதாக இந்தியில் பேசிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனைதொடர்ந்து என் ஐ ஏ போலீசார் அளித்த புகாரின் பேரில் சென்னை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். செல்போன் சிக்னலை வைத்து எந்த ஊரில் இருந்து அழைப்பு வந்தது மற்றும் அந்த சிம்கார்டு யார் பெயரில் உள்ளது என சைபர் கிரைம் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அதில் அந்த சிம் கார்டு மகாராஷ்டிராவில் வாங்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மிரட்டலுக்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News