54வது ஜிஎஸ்டி கூட்டம்; புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்க முடிவு!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 54வது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-10 04:42 GMT

It is not me who decides how much funds should be given to each state, it is the Finance Committee”: Nirmala Sitharaman Answers

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 54 வது சரக்கு மற்றும் சேவை வரி [ஜிஎஸ்டி] கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நொறுக்குத் தீனிகளுக்காக ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சுரன்ஸ் ஆகியவற்றின் வரியை குறைப்பது குறித்து அடுத்து நவம்பர் மாதம் நடக்க உள்ள கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி விதிக்கும் முடிவை தாற்காலிகமாக ஒத்திவைக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க அரசு பரிசீலித்து வந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். சிறிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் நடுத்தர வகுப்பு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் கூறியதால் இந்த முடிவை அரசு தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.

Tags:    

Similar News