பாஜக எம்.பி.களுக்கு சீட் மறுப்பு - மோடி அதிரடி !

Update: 2024-03-26 09:13 GMT

 பிரதமர் மோடி

பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.

எனவே வேட்பாளர் தேர்வின்போது சரியாக செயல்படாத தற்போதைய எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கிறார். 

பாரதிய ஜனதா கட்சி இதுவரை 5 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. நேற்று முன்தினம் மாலை 111 வேட்பாளர்கள் கொண்ட 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் மத்திய மந்திரி வி.கே.சிங் உள்பட 23 எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இதுவரை 5 கட்டங்களாக பா.ஜ.க. வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் 398 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இடங்களில் ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த சுமார் 100 பேருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News