விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் - SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Update: 2024-03-11 08:52 GMT
உச்ச நீதிமன்றம்
தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30, 2024 வரை கால அவகாசம் கோரி SBIமனு தாக்கல் செய்தது. எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும் தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் (மார்ச் 12) சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
26 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? நாட்டிலேயே பெரிய வங்கியான SBI-யால் தகவல்களை எடுப்பது கடினமான செயலா? தேர்தல் பத்திர விவரங்கள் அடங்கிய உறையை பிரிக்க முடியாதா? என SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் நடைமுறை பிரச்சனைகள் என்றுக் கூறிக்கொண்டு இருக்காமல் உத்தரவை செயல்படுத்துங்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.