வங்கதேச மக்களுக்கு இ-மெடிக்கல் விசா - பிரதமர் மோடி!
வங்கதேச மக்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதியை தொடங்கவும், அந்நாட்டின் ரங்பூரில் புதிய தூதரகத்தை திறக்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதியை இந்தியா தொடங்கவுள்ளது. வங்கதேசத்தின் வடமேற்குப் பகுதி மக்களின் வசதிக்காக ரங்பூரில் புதிய துணை தூதரகத்தை திறப்பதற்கு நாங்கள் முன்முயற்சி எடுத்துள்ளோம். வங்கதேசம் இந்தியாவின் மிகப் பெரிய வளர்ச்சி பங்காளியாகும். வங்கதேசத்துடனான உறவுகளுக்கு நாம் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். இணைப்பு, வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை இரு நாடுகளின் மையமாக உள்ளது.'' எனக் குறிப்பிட்டார்.