ஆந்திரா-தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்!!
ஆந்திரா மாநிலம் விஜயவாடா, விசாகப்பட்டிணம், ஜக்கையாபேட்டை உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆந்திரா மாநிலம் விஜயவாடா, விசாகப்பட்டிணம், ஜக்கையாபேட்டை உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தன. ஒரு சில வீடுகளின் சுவற்றில் விரிசல் ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்த பொதுமக்கள் உயிருக்கு பயந்தபடி அலறி அடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவு பதிவானது. தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகரின் பல பகுதிகளிலும், கம்பம், ரங்கார ரெட்டி, வாரங்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஹயாத் நகர எல்லைக்குட்பட்ட வனஸ்தலிபுரம், ஹயாத் நகர், அப்துல்லாபூர் மெட், ஹணுகொண்டா, கொத்தக்குடேம், மனுகூர், பத்ராசலம், சார்லா சிந்த கனி, நகுல வஞ்சா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.