18வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு தேர்தல்!
Update: 2024-06-26 04:56 GMT
சபாநாயகர் தேர்தல்
மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்னும் சற்று நேரத்தில் (காலை 11 மணிக்கு) தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளும் தே.ஜ. கூட்டணி சார்பில் ஓம் பிர்லா, இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
மக்களவை துணை சபாநாயகர் பதவியை பாஜக தரமறுத்ததால் போட்டி உருவாகியுள்ளது.
இந்திய வரலாற்றில் 3வது முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக 1952 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளது.