நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் !

Update: 2024-06-25 09:10 GMT

 சபாநாயகர் தேர்தல் 

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.

சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாஜக எம்.பி. ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் எம்.பி. கே சுரேஷும் களத்தில் உள்ளனர்.

வழக்கமாகத் துணைச் சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்குத் தரப்படும் நிலையில், இந்த முறை ஆளும் பாஜக அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் நமது நாட்டில் முதல்முறையாக லோக்சபா சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மக்களவை சபாநாயர் பதவிக்கு பெரும் போட்டி எழுந்துள்ளது. முன்னதாக, மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். அதே சமயம் மக்களவை துணை சபாநாயர் பதவி கேட்ட எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்களவையில், துணைசபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க எந்த உத்தரவாதமும் அளிக்காத நிலையில், மக்களவை சபாநயகர் பதவிக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி, கே.சுரேஷ் என்பவரை எதிர்கட்சிகள் சார்பில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags:    

Similar News