ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

Update: 2024-02-06 05:18 GMT

அமலாக்கத்துறை சோதனை 

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினருக்கு தொடர்புடைய சுமார் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமார் வீட்டிலும், ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான குப்தா வீட்டிலும் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் என 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று (06.05.2024) காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறை தொடர்பான முக்கிய தகவல்களை ஆம் ஆத்மி கட்சி இன்று யூடியூபில் வெளியிடப் போவதாக அறிவித்த நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News