நிபா வைரஸ் அதிகரிப்பால் கேரளாவில் தீவிரம் !!

Update: 2024-07-24 06:39 GMT

நிபா வைரஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கேரள மாநிலம் மலப்புரம் பாண்டிக்காடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் வகையில் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மலப்புரத்தில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் தேசிய வைராலஜி மருத்துவ நிபுணர் குழுவினர் முகாம் அமைத்துள்ளனர். சிறுவனுடன் தொடர்பில் இருந்த 214 பேரில் 60 பேரை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதில் 14 பேருடைய பரிசோதனை மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சிறுவன் வசித்து வந்த மலப்புரம் பகுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஒவ்வொரு சோதனை சாவடியிலும் மூன்று பேர் நியமிக்கப்பட்டு நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து மற்றும் தனியார் வாகனங்களில் வரும் பயணிகளை தெர்மாமீட்டர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னர் அனுமதிக்கிறோம் , முக கவசம் அணியவும் அறிவுறுத்தி வருகிறோம்.

மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை நிபா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News