அபுதாபியில் முதல் இந்து கோயில்... பிரதமர் மோடி திறப்பு !

Update: 2024-02-14 12:03 GMT

பிரதமர் மோடி 

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் முதல் இந்து கோவிலான சுவாமி நாராயணன் கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். 

சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த கோயில் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக அபுதாபி சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதை உடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அகிலான் மோடி நிகழ்ச்சியில் வெளிநாடு வால் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். இதனை அடுத்து துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் உரக்கா பகுதியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கோவிலைத் திறந்து வைத்து பூஜை செய்து வழிபட்டார்.

Tags:    

Similar News