ஆந்ரா தெலங்கானாவில் வெள்ளம் பாதிப்பு: முதல்வர்கள் நேரில் ஆய்வு!

Update: 2024-09-02 06:11 GMT

ஆய்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆந்திரா, தெலங்கானாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த மூன்று நாட்களாக கன மற்றும் மிக கன மழை பெய்து வருகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன. 

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மழை வெள்ளம் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்து நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இதே போல் மீட்பு, நிவாரண பணிகளுக்கு ஆயத்தமாக இருக்கும்படி அதிகாரிகளை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளப் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

Similar News