இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக முன்னாள் ராணுவ தளபதி அறிவிப்பு..!

Update: 2024-07-25 10:52 GMT

 சரத் பொன்சேகா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2022-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடம் பெரிய புரட்சி வெடித்தது. இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தபடி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.

இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போதே அங்கு தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே பதவி காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளதால் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News