EMI முறையில் லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள்! குஜராத்தில் அதிர்ச்சி!

Update: 2024-06-06 10:50 GMT

லஞ்சம்

குஜராத்தில் EMI முறையிலான லஞ்சம் வசூலிக்கும் நடைமுறை மிகவும் பொதுவானதாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குஜராத் ஊழல் தடுப்புப் பணியகம் இந்த ஆண்டு மட்டும் இதுத் தொடர்பான 10 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்குகளில் GST-யில் மோசடி செய்ய சுமார் 21 லட்சம் ரூபாய் லஞ்சத்தை 10 தவணைகளாக கொடுக்க சொல்லியது மற்றும் நிலப் பிரச்சனையை தீர்க்க ஒரு விவசாயிடம் 85,000 ரூபாய் லஞ்சத்தை 3 தவணைகளாக அரசு அதிகாரிகள் கொடுக்க சொல்லியதும் அடங்கும்.

குஜராத்தில் ஊழல் வழக்குகள் கணிசமாக உயர்ந்துள்ளன; இதுவரை 86 போலீசார் லஞ்சம் பெற்ற வழக்குகளில் சிக்கியுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5-வது ஆண்டாக லஞ்ச வழக்குகளில் முன்னணி அரசுத் துறையாக குஜராத் காவல்துறை இருந்து வருகிறது.

Tags:    

Similar News